பிரம்மச்சரிய சிந்தனைகள் 2

Comments · 114 Views

பிரம்மச்சரியத்தில் ஆரம்ப கட்டத்தில் பயணிக்கும் சகோதரர்களுக்கான சிந்தனைகள் 2

சில சகோதரர்கள் பிரம்மச்சரியத்தில் அதிக நாட்கள் வரவேண்டும் என்று நினைக்கின்றார்கள் ஆனால் மிக விரைவிலேயே தோற்று விடுகின்றார்கள். திரும்பவும் முதலில் ஆரம்பிக்கின்றார்கள் மறுபடியும் தோற்று விடுகின்றார்கள். இது அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கின்றது . ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து திரும்பத் திரும்ப அதையே செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் ஏன் சில நம் சகோதரர்களால் பிரம்மச்சரியத்தில் நீண்ட நாட்கள் தொடர முடியவில்லை என்று விரிவாக இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

முதலில் பிரம்மச்சரியத்தில் ஏன் நீங்கள் தொடர வேண்டும் இந்த பிரம்மச்சரியத்தில் தொடர்வது மூலமாக நீங்கள் என்ன அடைய விரும்புகின்றீர்கள் என்று உங்களுக்குள் ஒரு தெளிவு இருக்க வேண்டும். இந்த உலக வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அற்ப சுகங்கள் அழகிய பெண் துணை, பொருட்கள், செல்வங்கள் போன்று பற்று வைத்து அதற்காக பிரம்மச்சரியத்தில் நீங்கள் முயற்சி செய்தால் உங்களால் அதை அடைய முடியும் ஆனால் அது மிகவும் அற்பமானதாக மட்டும் தான் இருக்கும். பிரம்மச்சரியம் மூலமாக கிடைக்கக்கூடிய நீங்கள் நினைத்துக் கூடப் பார்த்திராத எண்ணற்ற நிலையான பேரின்பங்கள், பேரானந்தங்கள் மற்றும் பெரும்பாலான பலன்களை உங்களால் அனுபவம் செய்ய இயலாது. பிரம்மச்சரியத்தில் பயணிப்பத்திற்கு வெற்றியடைவதற்கு உங்களுக்கு உயர்ந்த நோக்கம் இருக்க வேண்டும். அதாவது இறைவன் காட்டிய வழியில் சென்று சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்து பிற உயிர்களுக்கு உதவ வேண்டும். உங்கள் மூலமாக பல உயிர்கள் பயனடையும்வண்ணம் நீங்கள் வாழ வேண்டும். தீயவற்றை தீமையான காரியங்களை வெறுத்து ஒதுக்க வேண்டும். நன்மைகளை அதிகம் சேர்க்க ஆசைப்பட வேண்டும் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். உங்களுடைய பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து அதன்படி வாழ வேண்டும். மரணமில்லா பெருவாழ்வை அடைவது இலட்சியமாக இருக்க வேண்டும். இதற்காக நான் பிரம்மச்சரியத்தில் வெற்றி அடைய விரும்புகின்றேன் என்று நீங்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டு இறைவனிடம் சங்கல்பம் (முத்திரை பதித்தல்) தினமும் இறைவனை நினைத்து சொல்லிக் கொண்டே நீங்க தொடர்ந்து முயற்சித்தால் நீங்கள் மிக எளிமையாக பிரம்மச்சரியத்தில் அதிக நாட்கள் தொடர இறையாற்றல் கருணை உங்களுக்கு அனைத்தையும் எளிதாக்கி நீங்கள் பிரம்மச்சரியத்தில் நிலைத்திருக்க உதவி செய்யும். இருந்தாலும் உங்களுடைய சுய கட்டுப்பாடும் மன உறுதியும் மிகவும் அவசியமான ஒன்று.

 

பிரம்மச்சரியத்தில் நீங்கள் புதிதாக அல்லது ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் செய்யக்கூடாதவைகள் என்னவென்று பார்க்கலாம். 

 

1 . ஏந்த வேலையும் இல்லாமல் சும்மா இருக்கக் கூடாது ஏதாவது ஒரு வேலையில் உங்களை பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

 

2. தனியாக இருக்கக் கூடாது குடும்பத்துடன் அல்லது நல்ல நண்பர்களுடன் ஏப்போதும் சேர்ந்து இருக்க வேண்டும். கையில் மொபைலுடன் உங்களுக்கு தனியாக அறை கிடைத்துவிட்டது அல்லது தனியாக நேரம் கழிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து விட்டது என்றால் அதைத் தவிர்த்து விட்டு வெளியே எங்கேயாவது சென்று மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் நேரத்தை கழிக்க வேண்டும். 

 

3. வெளியில் சென்றால் பெண்களை பார்ப்பது அல்லது டிவியில் படம் பார்ப்பது மொபைல் போனில் படம் பார்ப்பது அல்லது வீடியோ சாங்ஸ் பார்ப்பது, YouTube shorts -ல் பெண்களை பார்ப்பது போன்ற அனைத்தையும் முழுவதுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பொழுது போக வேண்டும் என்றால் அதிகம் வேலை செய்து பொழுதைப் போக்க வேண்டும் அல்லது புத்தகம் படிக்கலாம் , புது மொழியை கற்றுக் கொள்ளலாம், புதிய அறிவை கற்றுக் கொள்ளலாம் அல்லது இயற்கையுடன் விழிப்புடன் தனிமையில் நேரத்தை கழிக்கலாம்.

 

4. அசைவ உணவை முழுவதுமாக தவிர்த்துக் கொள்வது நல்லது. முருங்கைக்காய் மற்றும் முருங்கை பூ சமைத்து சாப்பிடுவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். பிஸ்கட் சாக்லேட் டைரி மில்க் போன்ற packed foods and drinks சாப்பிடுவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக நிறைய இயற்கையான காய்கறிகள் பழங்கள் எடுத்துக்கொண்டால் உங்கள் எண்ணங்கள் நல்ல விதமாக இருக்கும். ஹோட்டலில் சாப்பிடுவதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் சமைத்து உண்பதே நல்லது. வயிறு புடைக்க சாப்பிடாமல் உணவை கம்மியாக எடுத்துக் கொள்வது நல்லது. இரவு ஆறு மணியிலிருந்து ஏழு மணி குல் சாப்பிட்டு முடித்து விட வேண்டும் இரவு 9 மணிக்குள் தூங்குவதற்கு படுத்து விட வேண்டும். காலை 3.30 to 5.00 'o' clock பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து அமைதியாக தியானம்,யோகா, உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்.

 

5. நேரத்தை அதிகம் விரையம் ஆக்கும் விஷயத்தில் நீங்கள் அடிக்க்ஷனாக இருக்கின்றீர்கள் என்றால் அதை முழுவதுமாக நிறுத்தி விட வேண்டும்.( Example ) Mobile gaming, pc gaming , watching movies, watching porn sites, web series, Tv shows, films , theatre, YouTube videos , youtube shorts, chatting girls , speaking girls on phone calls long time etc. இதில் நீங்கள் ஏதில் அடிக்க்ஷனாக இருக்கின்றீர்களோ அதை உடனே நிறுத்தி விட வேண்டும்.

சில சகோதரர்கள் பல வருடங்களாக porn videos பார்த்து சுய இன்பம் செய்து தங்கள் மனநிலையே மொத்தமாக கெடுத்து வைத்திருக்கின்றார்கள்.

 

இதன் விளைவு பெண்களைப் பார்த்தாலே காம எண்ணம் உடனே வந்து விடுகின்றது. பெண்களை சாதாரணமாக பார்த்தாலே காம பார்வையாக பார்ப்பது. பெண்களை கண்ணைப் பார்த்து பேச முடியாமல் போவது. பெண்களைப் பார்த்தால் தங்களுடைய கண்கள் தானாக அவருடைய மார்பகங்களை பார்ப்பது போன்று தங்களை அறியாமலே தங்கள் மனதில் ஏற்பட்ட ஆழ்மன பதிவினால் பல கஷ்டங்களை மன உளைச்சல்களை தங்களுக்கு தாங்களாவே ஏற்படுத்திக் கொண்டு தினமும் கஷ்டப்படுகின்றார்கள். இதனால் அதிக மன உளைச்சல் மக்களை face பண்ணுவதற்கு பயம் . பெண்களிடம் பேச வேண்டும் என்றால் பயம். மக்கள் கூட்டமான இருக்கும் இடத்திற்கு சென்றாள் பதட்டம். போன்று பயம், பதட்டம், தாழ்வுமனப்பான்மை, இன்னும் எண்ணற்ற கஷ்டங்களை ஏற்படுத்திக் கொண்டு இதிலிருந்து எப்போது நாம் விடுபடுவோம் நாம் எப்போது பழைய படி வாழ்வோம் என்று தினம் தினம் தோல்வியடைந்து நாட்களை கடந்து கொண்டிருக்கின்றார்கள்.  

 

இதற்கு நீங்கள் எந்த மனநல வைத்தியரை பார்த்தாலும் உங்கள் இந்த பிரச்சனை தீராது.. இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி பிரம்மச்சரியத்தை பின்பற்றுவது மட்டும் தான். இறைவனிடம் முழுமையாக சரணாகதி ஆவது ஒன்றே வலி. பிரம்மச்சரியம் ஒன்றே தீர்வு. பிரம்மச்சரியத்தை பின்பற்றி அதிக நாட்கள் நீங்கள் நிலைத்திருக்கும் போது இறையாற்றல் கருணையினால் உங்கள் உள்ளம் தூய்மை அடையும் உங்கள் ஆழ்மனதில் தேவையற்ற கெட்டபதிவுகள் எல்லாம் அழிந்துவிடும். ஒரு புது மனிதராக எல்லோரும் மதிக்கப்படும் போற்றப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த மனிதராக மாறுவீர்கள் அப்போது எல்லோரும் உங்களை நேசிப்பார்கள் மற்றும் உங்களை நீங்களே நேசிப்பீர்கள். வாழ்க வளமுடன்❤️

"ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து விட்டு ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசமான விளைவை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்"

"எல்லா கோணங்களில் இருந்தும் ஒரு கேள்வியை அனுகிப்பார் பிறகு எங்கே தவறு ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பதை நீ கண்டறிவாய்"

"நீங்கள் உங்கள் நினைப்புகளையும், செயல்களையும் ஒழுங்கு படுத்துங்கள் உங்கள் வாழ்க்கை ஒழுங்காகிவிடும்"

"சிந்தனையில் 90% சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது அதனால் அவன் பெரிய தவறுகளை தொடர்ந்து செய்கிறான் சரியான பயிற்சி பெற்ற மனமோ மனிதனோ தவறு செய்வதில்லை"

"உங்களது நன்றி கெட்ட நடத்தைக்காக வரவிருக்கும் தீங்கிலிருந்து உங்களை காப்பாற்றும் படி இறைவனிடம் மண்டியிட்டு வழிபாடு செய்யுங்கள்"

"தீமை குறைத்து நல்லதை சேர்ப்பதில் இடைவிடாத கடும் முயற்சியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்"

Comments