பிரம்மச்சரிய சிந்தனைத்துளிகள் சில..

Comments · 153 Views

பிரம்மச்சரியத்தில் ஆரம்ப கட்டத்தில் பயணிக்கும் சகோதரர்களுக்கான சில சிந்தனைகள்.

பிரம்மச்சரிய நினைவூட்டல்கள் சில.

 

நீங்கள் பிரம்மச்சரியத்தில் ஆரம்ப நிலையில் இருக்கின்றீர்கள் என்றால் வெளியில் அந்நிய பெண்களை பார்ப்பதை விட்டும் உங்கள் பார்வையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாம் வெளியில் செல்லும்போது நமக்கு முன்னால் ஒரு அழகான பெண் வந்தால் உடனே நம் மனம் சொல்லும் ஒருமுறை அவளைப் பார் ஒன்றும் தவறில்லை, அவள் எவ்வளவு அழகா சிரிக்கிறாள் என்று பார் ! அவள் உன்னை தான் பார்க்கின்றாளா ? என்று பார் என்று மனம் நம்மை தூண்டும் அந்த நேரத்தில் நாம் மனதிற்குள் சொல்ல வேண்டியது. சாதாரணமாக பார்க்கும் முதல் பார்வை என்னுடையது இரண்டாவது பார்வை காமத்தின் பார்வை அதாவது நாம் நடந்து போய் கொண்டிருக்கும் போது முன்னாள் யார் வருகிறார் பின்னால் யார் நிற்கிறார் என்று சாதாரணமாக முதல் தடவை பார்ப்பது அது நம்முடைய பார்வை. மனம் தூண்டப்பட்டு இரண்டாவது முறை ஒரு அந்நிய பெண்ணை பார்ப்பது காமத்தின் பார்வை அதனால் சகோதரர்களே இதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். (இதேபோன்றுதான் ஒரு பெண்ணை டிவியில் பார்த்தாலும் உங்கள் மொபைல் போனில் பார்த்தாலும் இது அனைத்தும் சமம் ) முதல் பார்வை என்னுடையது இரண்டாவது பார்வை காமத்துடையது.  பிரம்மச்சரியத்தின் வெற்றி மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் தான் உள்ளது. பிரம்மச்சரியத்தின் அஸ்திவாரம் மனக்கட்டுப்பாடே ஆகும்.

கண் வழியாக நாம் பார்ப்பது தான் இதயத்தில் எண்ணங்களாக பதிவுகளாக பதிவாகின்றது இதயத்தின் திறவுகோல் நம் கண்களே. நம் கண்களால் எதைப் பார்க்க வேண்டும் எதைப் பார்க்கக் கூடாது‌ (பெண்களை நான் தவறாக எண்ண மாட்டேன், நான் தவறாக பார்க்க மாட்டேன், பெண்களை தவறாக காண்பிக்கும் எந்த ஒரு சோசியல் மீடியாஸ் மற்றும் டிவி , youtube சேனல்கள், படங்கள், அனைத்தையும் பார்ப்பதை விட்டும் தவிர்த்துக் கொள்வேன் என்ற கட்டுப்பாடுகளை நம் மனதிற்கு பதிய வைத்துக் கொண்டு அதன்படி பின்பற்ற ஆரம்பித்தாலே பிரம்மச்சரியத்தில் 144 நாட்களுக்கு மேல் நம்மால் தொடர முடியும். 

 

*Some suggestions for staying celibacy in the early stages?*

*Dopamine Fasting

*Cold shower 

*No use phones and internet some days

*Water fasting

*Daily Hearing and watching spiritual videos and celibacy videos 

*Daily routine exercise running & jacking 

*Daily saying muthirai pathithal 

*Learning new knowledges and language 

*Spend time to improve your business or work

*Learn new meditation and apply your life (celibacy.in)

*Use your time to Doing something productivity and learning 

*And keep yourself busy anytime

"ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்துவிட்டு ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசமான விளைவை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்"

"நாம் இப்போது இருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பாளி நாம் விரும்புகிற படி நம்மை ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் நம் இடத்திலேயே இருக்கிறது"

"நீ தனிமையில் இருக்கும் பொழுது உனக்கு என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கை தீர்மானிக்கிறது எனவே உங்கள் என்னத்தை சீரமைத்துக் கொள்ளுங்கள்"

"நம்மிடம் இருக்கும் தனிப்பெரும் சக்தி வாய்ந்த சொத்து நம் மனம் தான் அதை சிறப்பாக பயிற்றுவித்தால் ஏராளமான மாற்றத்தை அதனால் உருவாக்க முடியும்"

"ஆயிரம் போர்க்களை வென்றவனை விட தன்னைத் தானே வென்றவனே சிறந்த வீரன்"

Comments
Kirishnaraj Kiri 2 w

💖💖 வாழ்க வளமுடன் அன்பான சகோதரரே 🎉

 
 
BHARATH 2 w

Well said, brother... expecting such amazing information from you.